Latestமலேசியா

மலாக்கா அம்னோ தலைவரை ஏமாற்றியதாக பிக் புளு டாக்சி உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜன 4 – ஆடம்பர கார் விற்பனை தொடர்பில் போலி டத்தோ விருதை பயன்படுத்தி மலாக்கா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ Abdul Rauf Yusof பை ஏமாற்றியதாக Big Blue Taxi Services நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர் shamsubahrin Ismail மீது குற்றஞ்சாட்டப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Darmafikri Abu Adam முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 57 வயதுடைய Shamsubahrin மறுத்தார். VVP 7, என்ற பதிவு எண் கொண்ட Toyata Alphard கார் விற்பனையில் Abdul Rauf Yusof பை ஏமாற்றியதாக Shamsubahrin மீது முதல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. அக்காரின் விலை 180,000 ரிங்கிட் என்று கூறியதை தொடர்ந்து அந்த வாகனத்திற்காக 95,000 ரிங்கிட்டை Abdul Rauf Yusof மிருந்து அவர் பெற்றுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி மலாக்கா சட்டமன்ற அலுவலகத்தில் Shamsubahrin இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். மேலும் முலமைச்சரின் அனுமதியின்றி சொந்த லாபத்திற்காக டத்தோ விருதை பயன்படுத்தியதாகவும் ShamSubahrin மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது . இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அவருக்கு 30,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அதோடு அவரது கடப்பிதழ்களை ஒப்படைக்கும்படியும் உத்தரவிடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!