பாகான் டத்தோ, பிப் 2 – மலாக்கா தேர்தலின்போது கையாளப்பட்ட வியூகம் ஜோகூர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படாது என அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவரன அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். வேட்பாளர் தேர்விலும் இது அடங்கும். மலாக்காவில் நமது வேட்பாளர்களில் 87 விழுக்காட்டினர் புதுமுகங்களாக இருந்தனர். 50 வயதுக்கும் குறைந்த வேட்பாளர்கள் 82 விழுக்காடு தொகுதிகளில் போட்டியிட்டனர். ஜோகூரின் அரசியல் களத்தில் வேறுபாடு இருப்பதால் மலாக்கா பாணியிலான அணுகுமுறை ஜோகூரில் பின்பற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.
வாக்காளர்களால் விரும்பக்கூடிய அவர்கள் சுலபமாக சந்திக்கக்கூடிய வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை 56 தொகுதிகளிலும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி களம் இறக்கும் என ஸாஹிட் கூறினார். தொகுதி பங்கீடு குறித்து வினவப்பட்டபோது இதனை எப்படி அனுகுவது என்பது குறித்து அம்னோ. ம,சீ.ச மற்றும் ம.இ.கா ஆகியவவை வழிமுறையை கொண்டுள்ளன. 14 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியில் இருந்தபோது கெராக்கான் போட்டியிட்ட தொகுதிகளில் இப்போது தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் போட்டியிடும் என்றும அவர் தெரிவித்தார்.