மலாக்கா, டிசம்பர்-28, மலாக்கா, பண்டார் ஹிலிரில் பிரபல பேரங்காடியில் நுழைந்த 2 முகமூடிக் கொள்ளையர்கள், ஒரு நகைக்கடையைக் கொள்ளையிட்டுத் தப்பினர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது CCTV கேமரா வழி தெரிய வருகிறது.
வைரலான 1 நிமிட 21 வினாடி காணொலியில், நகைக்கடையிலிருக்கும் 2 பெண் பணியாளர்களைக் கொள்ளையர்கள் நெருங்குகின்றனர்.
அணிந்திருந்த ஜேக்கேட்லிருந்து ஏதோ ஆயுதத்தை காட்டி நகைகளை எடுத்துத் தருமாறு அவர்களை மிரட்டுகின்றனர்.
இரு பெண்களும் செய்வதறியாது அங்கமிங்கும் ஓடிய நிலையில், கொள்ளையர்களில் ஒருவன் எகிறிப் பாய்ந்து ஏராளமான நகைகளை அள்ளினான்.
தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் இரு பெண்களும் ஓரமாக பயத்தில் நின்றிருந்த நிலையில், கொள்ளையர்கள் நகைகளுடன் ஓட்டம் பிடித்தனர்.
அக்கொள்ளைச் சம்பவம் விசாரணையிலிருப்பதை மலாக்கா தெங்கா போலீஸ் உறுதிப்படுத்தியது.