Latest
“மலாக்கா போக்குவரத்துக்கு நான் புதியவன்” – எதிர் திசையில் வாகனமோட்டி வைரலான மாணவன் வாக்குமூலம்
மலாக்கா, நவம்பர்-13 – புதிய இடமென்பதால் போக்குவரத்து இன்னும் அத்துப்படியாகவில்லை; அதோடு Waze செயலியும் குழப்பி விட்டதாம்.
மலாக்கா, ஜாலான் ஹங் துவாவில் சாலையின் எதிர் திசையில் பயணித்து வைரலான 18 வயது பாலிடெக்னிக் மாணவர் கூறியுள்ள காரணங்கள் அவை.
சனிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில், அவ்விளைஞனின் Perodua Aruz கார் எதிர் திசையில் புகுந்து, மற்ற 2 வாகனங்களை கிட்டத்தட்ட மோதி விடும் அளவுக்கு ஆபத்தாகப் பயணித்தது வைரலான வீடியோவில் தெரிந்தது.
ஜோகூர், தாமான் பாகோ ஜெயாவைச் சேர்ந்த அம்மாணவரிடம் மலாக்கா தெங்கா IPD-யில் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டு, பின்னர் அபராத சம்மனும் வழங்கப்பட்டது.
அதே சமயம், சாலைப் போக்குவரத்துச் சட்டம் தொடர்பான மேல் விசாரணைக்கு வருமாறு, அம்மாணவருக்கும், அவரோட்டிய காரின் உரிமையாளரான அவரின் தந்தைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.