Latestமலேசியா

மலாக்கா மிருகக் காட்சி சாலை 5 நாட்களுக்கு மூடப்படுகிறது

மலாக்கா, பிப் 10 – விலங்குகள் பராமரிப்பாளர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மலாக்கா மிருகக் காட்சி சாலை 5 நாட்களுக்கு மூடப்படுகிறது.

அந்த சுற்றுலா ஈர்ப்பு பகுதியில், முழுமையாக கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென Hang Tuah Jaya நகராண்மைக் கழகத்தின் தலைவர் Datuk Shadan Othman தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து, சம்பந்தப்பட்ட பணியாளருக்கு கோவிட் தொற்று கண்டுள்ளது. அவரிடமிருந்து மிருகக்காட்சி சாலையில் வேறு யாருக்கும் அந்த தொற்று கண்டிருக்கவில்லை என்றாலும், பொது மக்களின் பாதுகாப்பு கருதி அத்தளம் முழுமையாக மூடப்படுவதாக Datuk Shadan Othman தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!