Latestமலேசியா

மலாக்கா முதலமைச்சர் பதவி விலகுவதை கட்டாயப்படுத்தும் சதித்திட்டமா?

கோலாலம்பூர், மே 9 – மலாக்கா முதலமைச்சர் Sulaiman Md Ali பதவி விலகியதாக ஆருடங்கள் வெளியான வேளையில் அவரை கட்டாயமாக பதவி விலகச் செய்வதற்கு நெருக்குதல் அளிக்கும் சதித்திட்டம் உருவாக்கப்பட்டதாக அம்னோ தலைவர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திடும்படி சுலைமானை குறிப்பிட்ட சில தரப்பினர் வற்புறுத்தி வருவதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் ஆருடங்கள் வெளியாகியிருப்பதாக அலோர் காஜா அம்னோ டிவிசனின் இடைக்காலத் தலைவர் Rospandi Leman கூறியுள்ளார். இந்த நவடிக்கையில் குறிப்பிட்ட அம்னோ தலைவர் ஒருவர் பின்னணியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனிடையே பதவி விலகும் கடிதத்தில் கையெழுத்திடும்படி முதலமைச்சர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான குற்றச்சாட்டை மலாக்கா அம்னோ துணைத்தலைவர் Ali Mohamad மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!