மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று மாலை மணி 4.09 அளவில் தரையிறங்கிய 9 M- SKF பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையிலிருந்து விலகியது. அந்த சம்பவத்தை மலேசியாவில் விமான வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி கேப்டன் நோரஸ்மான் மாமுட் (Norazman Mahmud ) உறுதிப்படுத்தினார். மலேசிய பயிற்சிக் கல்லூரியின் அந்த விமானத்தில் அப்போது பயிற்சி விமானி மட்டுமே இருந்ததாகவும் அவர் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அந்த விமானம் ஓடு தளத்திலிருந்து அகற்றப்பட்டு அதில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நோரஸ்மான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அதோடு இச்சம்பவம் குறித்து போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்து விசாரணைப் பிரிவு 2016ஆம் ஆண்டின் சிவில் விமான விதிமுறைக்கு ஏற்ப விசாரணை நடத்தும் என நேராஸ்மான் கூறினார்.