மலாக்கா, ஜன 4 – UTem எனப்படும் மலாக்கா தொழிற்நுட்ப பல்கலைகக்கழக மாணவர்களிடையே கோவிட் தொற்று பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. தொற்றுக்குள்ளான அனைத்து மாணவர்களும் SOP விதிமுறைக்கு ஏற்ப தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 20க்கும் குறையாத மாணவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக மலாக்கா தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தன் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பிரிவுக்கான உதவி வேந்தார் Ghazali omar தெரிவித்தார். அவர்கள் தற்போது கோவிட் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது நிலைக்கான காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறியை கொண்டுள்ளர். அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்தற்கு உட்பட்ட பகுதியிலேயே தனித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Related Articles
Check Also
Close