Latestமலேசியா

மலாயா புலிகளின் எண்ணிக்கையை பெர்ஹிலித்தான் ஆராயும்

கோலாலம்பூர், டிச 24 – பெர்ஹிலித்தான் எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காத்துறை விலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களில் மலாயா புலிகள் அல்லது (Panthera Tigiris Jackson ) எண்ணிக்கை குறித்து அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அவ்வப்போது கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

ஒரு பகுதியில் உள்ள மக்கள்தொகையின் நிலையைப் புரிந்துகொண்டு, மீண்டும் மீண்டும் மனிதர்கள் மற்றும் -புலிகளுடன் மோதல்கள் ஏற்படக்கூடிய இடங்களில் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு அந்த விலங்குகள் குறித்த புள்ளி விவரம் மீதான ஆய்வு மிகவும் முக்கியமாகும் என தீபகற்ப மலேசியா வனவிலங்கு பூங்காத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹசிம் ( Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.

மேலும் இயற்கை வளங்கள் அமைச்சு மலாயா புலிகளைப் பாதுகாப்பதற்காக பல்வேறு குறுகிய மற்றும் நீண்ட கால முயற்சிகளை செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இயற்கை வாழ்விடங்களில் மலாயா புலிகளின் எண்ணிக்கை 150க்கும் குறைவாக இருப்பதால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து , இந்த விவகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அப்துல் காதிர் தெரிவித்தார்.

அதன் விளைவாக பிரதமர் தலைமையில் மலாயா புலிகள் பாதுகாப்புக்கான தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த பணிக்குழு மலாயா புலிகளின் எண்ணிக்கை நெருக்கடியைக் கையாள்வதில் கூட்டரசு மற்றும் மற்றும் மாநில அரசுகளுடன் கொள்கை , சட்ட வரைவு உட்பட பல்வேறு நடவடிக்கைக்கான செயல்முறை திட்டத்திற்கு பேச்சு நடத்துவதற்கான தளமாகவும் அமையும் என அப்துல் காதிர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!