
கோலாலம்பூர், ஜூன் 2 – மலாய்க்காரர்களுக்கான பிரகடனம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக வழக்கறிஞர் Rafique Rashid Ali தெரிவித்தார். இன்று நண்பகல் மணி 12.30 அளவில் லங்காவியின் முன்னாள் எம்.பியுமான மகாதீர் புக்கிட் அமானில் வாக்குமூலம் தெரிவித்தார். . அப்போது அவருடன் தாமும் சென்றதாக Rafique கூறினார். நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினால் அதனை எதிர்நோக்குவதற்கு தாம் தயாராய் இருப்பதோடு நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தெரிவிப்பேன் என்றும் மகாதீர் போலீசிடம் கூறியதாக Rafique தெரிவித்தார்.