Latestமலேசியா

மலாய்க்காரர்கள் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவதை நிறுத்துவீர்; மகாதீருக்கு நஜீப் வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 23 – இனியும் மலாய்க்காரர்கள் பெயரையும் அவர்கள் தொடர்பான உணர்வை எழுப்பி அரசியல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளும்படி துன் டாக்டர் மகாதீருக்கு முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஆலோசனை கூறியிருக்கிறார். அரசியல் நடவடிக்கைக்காக மலாய்க்கார்களை பயன்படுத்திக்கொள்ளும் போக்கை மகாதீர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் நஜீப் தெரிவித்துள்ளார்.

அதிகாரம் இல்லாதபோது “மலாய்க்காரர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். அவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர், மலாய்க்கார்கள் மீதான பிரகடனம் ” போன்றவற்றை மகாதீர் எழுப்புவதும் , அதிகாரத்தில் இருக்கும்போது ” மலாய்க்காரர்களை சோம்பேறிகள் என்றும், மலாய்க்காரர்கள் எளிதில் மறந்துவிடுபவர்கள், மலாய்க்காரர்களுக்கு அரசியல் சாணக்கியம் தெரியவில்லை, மலாய்க்காரர்கள் வயிற்றைக் கட்ட வேண்டும், பணக்காரர்களை கண்டு மலாய்ககாரர்கள் பொறாமைப்படக்கூடாது, மலாய்க்காரர் என்ற முறையில் எனது பிள்ளைகள்தான் திறமையான வர்த்தகர்கள்” போன்ற வார்த்தை ஜாலாங்களை இனியும் பயன்படுத்துதை மகாதீர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நஜீப் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!