
கோலாலம்பூர், ஏப் 20 – 20 விழுக்காடு மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவு கிடைத்தால் பெரிக்காதான் நேஷனல் கூட்டணி வருகின்ற மாநில தேர்தலில் சிலாங்கூரையும் நெகிரி செம்பிலானையும் கைப்பற்றிவிட முடியும் என கூறியிருக்கின்றார் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் செனட்டர் டத்தோ ரசாலி இட்ருஸ்.
6 மாநிலத் தேர்தல்கள் விரைவில் நடைப்பெறவுஉள்ள நிலையில் பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் தற்போது பக்காதான் ஹராப்பான் கூட்டணி வசம் உள்ளன.
கிளந்தான், திரெங்கானு, கெடா பெரிக்காதான் நேஷனல் வசம் இருக்கின்றன.
மலாய்க்காரர்களின் வலுவான ஆதரவோடு இந்த மூன்று மாநிலங்களில் தொடர்ந்து தாங்கள் வெற்றிப் பெற முடியும் எனக் கூறிய அவர் சிலாங்கூரையும் நெகிரி செம்பிலானையும் கைப்பற்றும் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவு குறைவான நிலையில் இருப்பதை ஒப்புக் கொண்ட ரசாலி, அவர்களின் 20 விடுக்காடு ஆதரவு கிடைத்தால் போதும். மலாய்காரர்களின் ஆதரவோடு பெரிக்காதான் நேஷனல் சிலாங்கூரையும் நெகிரி செம்பிலானையும் கைப்பற்றுவதோடு வலுவான பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியும் எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.