கோலாலம்பூர், ஜன 4 – உண்மையான அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மலாய்ககாரர் அல்லாதாரிடம் தேசிய முன்னணி அமல்படுத்த வேண்டும் என அம்னோவின் உதவித் தலைவரான Mohamed Khaled Nordin கேட்டுக்கொண்டார். மாறாக வெறும் ஆறுதலுக்காக மட்டும் மலாய்க்காரர் அல்லாதாரை அரசாங்க பதவிகளில் நியமிப்பதோடு மட்டும் தேசிய முன்னணணி இருந்துவிடக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
அதே வேளையில் தேசிய முன்னணியிலுள்ள அதன் உறுப்புக் கட்சிகள் மற்றும் அம்னோவின் நட்புறவு கட்சிகள் மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவை பெறுவதற்கு அவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். மலாய்காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவை பெறுவதற்கு மலாய்க்காரர்களை மட்டுமே அவர்கள் நம்பியிருக்கக்கூடாது . உண்மையான பங்காளித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் அதிகார பகிர்வு கோட்பாட்டை மலாய்க்காரர் அல்லாதாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதைவிடுத்து மலாய்க்காரர்கள் அல்லாதாரில் ஒன்றிரண்டு பேர்களை மட்டும் அரசாங்கத்தில் நியமித்துவிட்டு அரசாங்கத்தில் அனைவரும் உள்ளடக்கிருப்பது போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடாது என முகமட் காலிட் நோர்டின் கேட்டுக்கொண்டார். நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையில் மலாக்காரர் அல்லாத சமுகத்தினரும் இருக்கின்றனர் என முன்னாள் ஜோகூர் மந்திரிபுசாருமான முகமட் காலிட் நோர்டின் சுட்டிக்காட்டினார்.