Latestமலேசியா

மலாய், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களைப் போதிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை : கல்வி துணையமைச்சர்

கோலாலம்பூர், மார்ச் 30 – மலாய், ஆங்கிலம், இஸ்லாமியக் கல்வி, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம், காட்சி கலைக் கல்வி, வரலாறு ஆகிய 6 பாடங்களைப் போதிப்பதற்கான ஆசியர் பற்றாக்குறை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021 -ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை 22, 327 ஆசிரியர்களை புதிதாக பணியில் அமர்த்த , பேரளவில் ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், புதிதாக ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையில், தனியார் பல்கலைகழகங்களில் இருந்து ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட விருப்பதாக, கல்வி துணையமைச்சர் லிம் ஹுய் யிங் (Lim Hui Ying ) தெரிவித்தார்.

இதனிடையே, கல்வி சேவை ஆணையம் நடத்திய நேர்காணலில் தோல்வி கண்ட பட்டதாரிகள், mySPP முறையின் கீழ் மீண்டும் ஆசியர் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். வயது 45-ஐ எட்டும் வரை அவர்கள் அந்த விண்ணப்பத்தை செய்ய முடியுமென துணையமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!