
நவ 25- GPS கட்சியிடம் மன்னிப்பு கோரியதை போல, இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை, மலாய் – முஸ்லீம் மக்களிடமும் DAP மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவர்களை சமாதான செய்ய அது உதவும் என, பெர்லீஸ் முஃப்தி டத்தோ டாக்டர் முஹமட் அஸ்ரி சைனுல் அபிடின் தெரிவித்தார். நாட்டை வழிநடத்தவுள்ள அரசாங்கத்தில் DAP-யும் இடம்பெறவுள்ளது.
அதனால், முஸ்லீம் மக்களிடமும் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனும் பரிந்துரையை தாம் முன் வைப்பதாக முஹமட் அஸ்ரி சொன்னார். அதே சமயம், முஸ்லீம் பிரதிநிதிகள் நிறைந்த கட்சி ஒன்று புதிய அரசாங்கத்தில் இடம் பெற வேண்டும் என்பதே தமது தரப்பின் கருத்தும்கூட என்றாரவர்.
நாட்டின் வளப்பத்தை உறுதிச் செய்ய, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு இதர கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் முஹமட் அஸ்ரி குறிப்பிட்டார்.