Latestமலேசியா

மலின்டோ ஏர் விமான நிறுவனத்தின் 50 ரிங்கிட் பயண பற்றுச் சீட்டு ; விண்ணப்பிக்க தவற வேண்டாம்

கோலாலம்பூர், டிச 6 – கோவிட் கால கட்டத்தில் உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு பயண பற்றுச் சீட்டுகளை வழங்கியிருக்கின்றது.
அவ்வாறு மொத்தம் 6,000 பற்றுச் சீட்டுகள் தமது நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், மலேசியர்கள் அந்த வாய்ப்பினை நழுவவிட வேண்டாமென மலின்டோ ஏர் விமான நிறுவனத்தின் தொடர்பு பிரிவின் தலைவர் சுரேஷ் வாணன் தெரிவித்தார்.

உள்நாட்டு சுற்றுலாப் பயணத்திற்கான 50 ரிங்கிட் பற்றுச்சீட்டிற்கு, மக்கள், மலின்டோ ஏர் அகப்பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் . அந்த விண்ணப்பத்துக்கான இறுதி நாள் இம்மாதம் டிசம்பர் 31 -ஆம் தேதியாகும். அந்த பயண பற்றுச் சீட்டை, அடுத்தாண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையிலான உள்நாட்டு விமான பயணங்களுக்கு பயன்படுத்த முடியுமென சுரேஷ் வாணன் குறிப்பிட்டார்.

இதுவரை மலின்டோ ஏர் விமான நிறுவனத்தின் பயண பற்றுச்சீட்டுகளை விண்ணப்பித்தவர்களில் 50 விழுக்காட்டினர் அதனை பயன்படுத்தியுள்ளனர்.
எனவே, உள்நாட்டு விமான பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பவர்கள் எஞ்சியிருக்கும் பற்றுச்சீட்டுகளைப் பெறும் வாய்ப்பினை தவற விட வேண்டாமென சுரேஷ் வாணன் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!