Latestமலேசியா

மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களுடன் தகவல் தொடர்பு துறை அமைச்சின் அதிகாரிகள் நேரடி சந்திப்பு

புத்ரா ஜெயா, செப்டம்பர் 24 – தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சிலின் உத்தரவுக்கு இணங்க முதன்மை பத்திரிகை செயலாளர் புவான் ஹனிம் மற்றும் அமைச்சரின் தொடர்பு துறை அதிகாரி டத்தோ சிவபாலன் அவர்களுடன், நேற்று மலேசியா தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஒரு மணி நேரச் சந்திப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

சங்கத்தின் நிதி நிலைமை, அலுவலகம், ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர், பணியாளர்களுக்குச் சிறப்பு நிதி, குடும்ப தின விழா, சிறப்பு மானியம் உட்பட பத்து கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக முதன்மை பத்திரிகை செயலாளர் புவான் ஹனிம் தெரிவித்தார்.

இதில் SKIM HAWANA வாயிலாக மலேசிய தமிழ் பத்திரிகையில் உடல் நல குறைவால் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ,அமைச்சர் நேரடியாக வருகை தந்து உதவி நிதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

அதேவேளையில், அமைச்சின் வாயிலாக மீடியா தொழிநுட்ப பயிற்சி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார், அவர்.

நிருபர், புகைப்பட கலைஞர்களுக்குச் சிறப்பு பெட்ரோல் சலுகை அட்டை, நல்ல திட்டம் ஆகியவை குறித்தும் அமைச்சர் பார்வைக்குக் கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே சங்கத்திற்கு வருடா வருடம் ஒரு சிறப்பு நிதி வழங்கும் கோரிக்கை ஒன்றும் முன் வைக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் செயலவை எடுத்துள்ள இந்த முயற்சி, அடுத்து அமைச்சர் தலைமையில் நடத்தப்படும் கூட்டத்தில் ஒரு நல்ல அறிவிப்பாகக் கிடைக்கும் என தாம் நம்புவதாக அதன் செயலாளர் வெற்றி விக்டர் தெரிவித்தார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், உதவித் தலைவர் காளிதாசன், ரவி முனியாண்டி ,செயலாளர் வெற்றி விக்டர், துணை செயலாளர் குணா, ஆட்சிக் குழு உறுப்பினர்களான காளிதாஸ் சுப்ரமணியம், இராமன் குட்டி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!