
கோலாலம்பூர், செப் 11 – இன்று மலேசியப் பிரதமர் அன்வாரைச் சந்தித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இதுகுறித்து தனது முகநூலில் பிரதமர் பதிவிட்டிருந்தார்.
‘ஆசிய மற்றும் அனைத்துலக ரீதியில் புகழ்ப்பெற்ற நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று என்னைச் சந்தித்தார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்த எனது போராட்டத்திற்கு அவர் வழங்கிய மரியாதையைக் கண்டு வியக்கிறேன். எனது இந்த போராட்டங்களை இனி வரும் தனது படங்களில் இணைத்துக் கொள்ளப் போவதாக ரஜினிகாந்த் என்னிடம் கூறியதும் இன்று நாங்கள் விவாதித்த விவகாரங்களில் ஒன்றாகும். சினிமா உலகில் மென்மேலும் பல உச்சங்களை ரஜினிகாந்த பெற நான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்’ என அன்வார் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.