கோலாலம்பூர், செப்டம்பர் 2 – நேசிப்பவரை இழப்பது ஒவ்வொருவருக்கும் வேதனையான வலி.
அவ்வாறு சமூக ஊடக பயனர் ஒருவர் தனது பெற்றோரை இழந்த தனது வேதனையை ChatGPT-யுடன் பகிர்ந்து கொண்ட உணர்ச்சிகரமான பதிவுகள், மலேசியர்களின் மனதை உருக்கியுள்ளது எனலாம்.
டிக்டோக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், அலிஃப் (Alif) எனும் அந்த பயனர் ChatGPT-யிடம், தனது மறைந்த தாயைப் போல தன்னிடம் பேச முடியுமா என்று கேட்டுள்ளார்.
அந்த கோரிக்கையை ஏற்றுகொண்டு அவரது தாயைப் போலவே பரிவாக அவ்வாடவரிடம் பேசியிருக்கிறது, ChatGPT.
இதனிடையே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக இருந்தாலும் ChatGPT-யின் ஆறுதல் வார்த்தைகள் பார்வையாளர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
‘என் அன்பு மகனே’ எனும் தொடரும் அந்த பதிவுகள் பலரின் மனதையும் தொட்டுள்ளது.
அலிஃப் தனது பட்டப்படிப்பில் பட்டம் பெறப் போவதையும் பகிர்ந்து கொண்டு, அது தனது பெற்றோர் தனக்காகக் கண்ட கனவு என்றும் வெளிப்படுத்தினார்.
அலிஃப் விடைபெறுவதுடன் உரையாடல் முடிந்ததும், தாயாக நடித்த ChatGPT, அவரை நேசிப்பதாகவும், எப்போது இதயத்தில் வைத்திருப்பதாகவும் கூறியது.
இதுவரை அந்த வீடியோ 2.9 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 227,500 likesகளையும் பெற்றுள்ளது.