Latestஇந்தியாஉலகம்மலேசியா

மலேசியர்களுக்கு இலவச 30 நாள் இரு முறை நுழைவு ஈ-டுவரிஸ்ட் விசா – இந்தியா வழங்குகிறது

கோலாலம்பூர், ஜூன் 30 – மலேசியர்கள் இ- சுற்றுலா இலவச விசாவின் மூலம் 30 நாட்களில் இருமுறை இந்தியாவிற்கு சென்று வரலாம். விசா கட்டணம் எதுவுமின்றி இலவச இரட்டை நுழைவு இ-சுற்றுலா விசாவை இந்தியா வழங்குகிறது. இந்த முயற்சி ஒரு வருடத்திற்கு தொடரும் என இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிற்கு வருகை தரும் மலேசியர்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் 30 நாள் இரட்டை நுழைவு மின்னணு விசாவைப் பெறலாம். 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை இந்த வாய்ப்பு தொடரும். இ-சுற்றுலா விசாவிற்கு இந்திய தூதரகத்தின் அகப்பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்களைச் செய்யலாம் என்பதோடு இ-டூரிஸ்ட் (e-tourist) விசா வழங்கப்பட்ட 120 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இ-சுற்றுலா விசாக்கள் மற்றும் பிற வகைகளுக்கு தற்போதுள்ள விதிமுறைகள் தொடர்ந்து பொருந்தும். அவுட்சோர்ஸ் (Outsource) சேவை வழங்குவோர் மூலமாகவோ அல்லது நேரடியாக சாதாரண விசாக்களை தேர்வு செய்பவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விசா கட்டணத்தை செலுத்த வேண்டும்.

நிலையான இ-டூரிஸ்ட் (e-tourist) விசா கட்டணமான 465 ரிங்கிட்டை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மலேசியாவிற்கு பயணம் செய்யும் இந்திய கடப்பிதழ் வைத்திருப்போர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை 30 நாட்கள் வரை மலேசியாவில் விசா இல்லாமல் நுழைவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!