
கோலாலம்பூர், ஜன 2 – 2023 புதிய ஆண்டில், மலேசியர்களுக்கு அரசாங்கத்தின் 7 நற்செய்திகள் என கூறி டிக் டாக் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருக்கும் காணொளியில் உள்ள விபரங்கள் பொய்யானது என தொடர்பு இலக்கவியல் அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார். 42 விநாடிகள் கொண்ட அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டு நேற்று மாலை மணி 7 வரையில் 18 லட்சத்துக்கும் அதிகாமானோரின் பார்வையைப் பெற்றது.
அதோடு அந்த காணொளி பதிவிறக்கம் செய்யப்பட்டு இதர சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது. இவ்வேளையில், ஒரு தகவலை பகிரும்போது அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.