
கிள்ளான் மே 31- மலேசியர்கள் மத்தியில் சொக்சோ விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
சொந்த தொழில் செய்பவர்களும் சொக்சோ சந்தாரர் ஆகலாம். மாதத்திற்கு 10 வெள்ளி வீதம் ஒரு ஆண்டுக்கு 120 வெள்ளி மட்டுமே அவர்கள் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் சொக்சோ சமூக நல பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். சொந்த தொழில் செய்பவர்களில் 5 லட்சத்து 70,000 பேர் மட்டுமே சொக்சோவில் அங்கத்தினர்களாக இடம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாண்டு இறுதிற்குள் பத்து லட்சம் பேரை அங்கத்தினர்களாக சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார். நேற்று கிள்ளானில் சொக்சோ சமூக நல நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது சிவக்குமார் இதனை தெரிவித்தார்.