கோலாலம்பூர், பிப் 15 – MySejahtera வில் இடம்பெற்றுள்ள முழுமையான தடுப்பூசி சான்றிதழ் ஆதராத்தின் அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த வருகையாளர்கள் இனி பிலிப்பின்சிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர்.
கோவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிப்பதில் மலேசியாவும் பிலிப்பின்ஸ் அரசாங்கமும் தற்போது பரஸ்பர உடன்பாட்டை கண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவின் இலக்கவியல் தடுப்பூசி சான்றிதழை தனது அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக பிலிப்பின்ஸ் தூதரகம் வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்படுள்ளது.