சிங்கப்பூர், மே 7 – ஜோகூர் மற்றும் மலேசியாவின் அணுக்கமான நண்பராக இருந்ததற்காக பதவி விலகிச் செல்லும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loongகிற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Ibrahim தமது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Leeயின் அர்ப்பணிப்பு மற்றும் தூர நோக்கு சிந்தனையினால் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்குமிடையே சிறந்த எதிர்காலத்திற்கான நெருங்கிய ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்தாக Sultan Ibrahim தெரிவித்தார்.
மேலும் Lee Hsien Loongகிற்கு பதில் சிங்கப்பூரின் புதிய பிரதமராக மே 15ஆம் நாள் பதவியேற்கவிருக்கும் துணைப் பிரதமர் Lawrence Wong அவர்களுக்கும் பேரரசர் தமது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
அவரது தலைமைத்துவம் நமது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுவடையச் செய்யும் என்றும் பேரரசர் நம்பிக்கைத் தெரிவித்தார். இஸ்தானாவில் வழங்கப்பட்ட அரசாங்க விருந்தில் உரையாற்றியபோது Sultan Ibrahim இத்தகவலை வெளியிட்டார்.
Sultan Ibrahim மற்றும் Permaisuri Agong, Raja Zarith Sofiah ஆகியோர் இரண்டு நாள் மேற்கொண்ட அரசாங்க வருகையை முன்னிட்டு அதிபர் Tharman Shanmugaratnam அவர்களுக்கு விருந்து வழங்கி கௌரவித்தார்.