Latestமலேசியாவிளையாட்டு

மலேசியாவின் கென்னி கோ BWF நிர்வாகக் குழு உறுப்பினரானார்

கோலாலம்பூர், மே 23 –   மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளரான டத்தோ கென்னி கோ அனைத்துலக பேட்மிண்டன் சங்கத்தின் நிர்வாகுழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இணையம்  மூலமாக நடைபெற்ற அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் 82அவது  கூட்டத்தில் 218 வாக்குகளைப் பெற்றதன் மூலம் நிர்வாக   குழுவிற்கு அவர்  தேர்ந்தெடுக்கப்பட்ட   20 உறுப்பினர்களில் ஒருவராக  இடம்  பெற்றார் .
1996 ஆம் ஆண்டு ஆட்லந்தா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற டென்மார்க்கின்  பால் ஈரிக்  ஹோயர் லார்சன்  அனைத்துலக பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத்தலைவராக  தாய்லாந்தின் குன்யிங் பதாமாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே பேட்மிண்டன்  போட்டியில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 21 புள்ளி நடைமுறை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது.
21 புள்ளிக்கு பதில்  வெற்றிப் புள்ளியை 11 புள்ளியாகவும் மொத்தம்  5 ஆட்டங்களை விளையாடும் நடைமுறையை அமல்படுத்தும் பரிந்துரையை அனைத்துலக பேட்மிண்டன் சங்கம்  முன்மொழிந்திருந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்களிப்புக்கு  மூன்றில் இரண்டு  பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து 21 புள்ளிகள் நடைமுறை தொடர்ந்து நிலைநாட்டப்பட்டது.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!