
கோலாலம்பூர், நவ 16 – மலேசியாவின் முதலாவது புள்ளியியல்துறை நிபுணர் டத்தோ ரமேஷ் சந்தர் காலமானார். நவம்பர் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமது 88 ஆவது வயதில் அதிகாலை மணி 2.50 அளவில் ரமேஷ் மரணம் அடைந்ததாக புள்ளியியல் துறையின் தலைவர் அலுவலகம் தெரிவித்தது. சுதந்திரத்திற்குப் பின் புள்ளியியல் துறையின் தலைவர் பதவியை வகித்த முதல் மலேசியராக காலஞ்சென்ற ரமேஷ் விளங்கினார்.
அவர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிவரை பணியாற்றியதாக புள்ளியியல்துறை தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மறைந்த ரமேஷ் வெற்றிகரமாக மேம்படுத்தியிருந்த முறையான புள்ளி விவரங்களை கையாளும் முறைதான் இன்றுவரை அத்துறையில் பயன்படுத்தப்படுவதாக புள்ளி விவரத்துறைக்கு 11 ஆண்டு காலம் தலைவராக பணியாற்றிய காலத்தில் தாம் அறிந்துகொண்டதாக டாக்டர் முகமட் உசிர் குறிப்பிட்டார்.