சைபர்ஜெயா, ஆகஸ்ட் 14 – சைபர்ஜெயாவில் செயல்பட்டு வரும் ஜெய்பூர் மஹால் (Jaipur Mahal) உணவகத்தில் முதன்முறையாக எண்ணெய்யில்லா அடுப்பில்லா உணவுகள் பிரம்மாண்டமான முறையில் அறிமுகம் செய்யப்பட்டன.
சமீபத்தில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் இந்த எண்ணெய்யில்லா அடுப்பில்லா உணவுகள் குறித்து அறிந்திருப்போம்.
அதுபோலவே, மலேசியாவில் சோனாவராயன் தலைமையில் ஜெய்ப்பூர் மஹால் உணவகத்தில், பிரபல சமையல் வல்லுநர் Vegan Chef Dave-யின் வழி அதிகாரப்பூர்வமாக இந்த உணவுகள் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டன.
உணவே மருந்து மருந்தே உணவு எனும் பழமொழிக்கேற்ப தமிழர்களின் வாழ்வியலில், ஆரோக்கிய உணவை மீண்டும் ஊக்குவிக்க இந்த வறுத்தல், அவித்தலற்ற உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த திறப்பு விழாவில் தமிழ்நாட்டிலிருந்து அடுப்பில்லா எண்ணெய்யில்லா உணவகத்தை நடத்தி வரும் கண்ணம்மா, நீலகண்டன் ஆகியோர் வருகை புரிந்து சிறப்பித்தனர்.
வறுத்தல், அவித்தலற்ற அந்த உணவு வகைகளை நீங்களும் ருசிக்க, ஜெய்பூர் மஹால் உணவகத்திற்கு சென்று சுவைத்து பாருங்கள்!