மலேசியாவின் முன்னாள் பேட்மிண்டன் விளையாட்டாளர் டத்தோ இங் பூன் பீ காலமானார்

ஈப்போ, ஆக 4 – இரு முறை தாமஸ் கிண்ணத்தையும் , அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் இரு முறையும் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கத்தையும் வென்று மலேசியாவுக்கு பெருமை சேர்த்த டத்தோ இங் பூன் பீ (Ng Boon Bee ) காலமானார். 84 வயதுடைய அவர் மாரடைப்பினால் நேற்று ஈப்போவில் இறந்தார். முதலில் டத்தோ டான் யீ கான், பின்னர் டத்தோ பஞ்ச் குணாளனுடன் இணை சேர்ந்து அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நான்கு ஆசிய விளையாட்டுப்போட்டியிலும் விளையாடி இங் பூன் பீ வெற்றி பெற்றுள்ளார். சியாப் மற்றும் சீ போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். இது தவிர ஒலிம்பிக் கண்காட்சி பேட்மிண்டன் போட்டியிலும் அவர் விளையாடியுள்ளார்.
மலேசிய பேட்மிண்டன் குழுவில் குட்டையான ஆட்டக்காரராக அவர் இருந்தாலும் உயரமாக குதித்து Smash அடிப்பதில் சிறந்து விளங்கினார். பேட்மிண்டன் விளையாட்டில் பங்கேற்பதற்கு முன் Ghani Minhat, Robert Choe மற்றும் V. கோவிந்தராஜூ ஆகியோருடன் இணைந்து 1950-ஆம் ஆண்டுகளில் தேசிய காற்பந்து குழுவிலும் இங் பூன் பீ விளையாடியுள்ளார். 1958-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு மூன்று முறை மெர்தேக்கா கிண்ண காற்பந்துபோடியில் வெற்றி பெற்ற தேசிய குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
ஈப்போ St Michael Institution பள்ளி மாணவர்களாக இருந்தது முதல் அவருடன் இரட்டையர் பிரிவில் விளையாடி அனைத்துக பேட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவித்ததை மறக்க முடியாது என டான் யீ கான் தெரிவித்தார். அவரது மரணம் பேட்மிண்டன் விளையாட்டிற்கு பேரிழப்பு என டான் யீ கான் வருணித்தார். நாட்டிற்குக அவர் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். ஆனால் முறையாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதுதான் பெரிய சோகம் என டான் யீ கான் வேதனையோடு தெரிவித்தார்.