
கோலாலம்பூர், செப் 3- மலேசியாவின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் தடையாக இருக்கும் தீவிரவாத சிந்தனைகள் வளர்வதை ஜொகூர் மக்கள் தடுக்க வேண்டும் என அமனா கட்சியின் தலைவர் முகமட் சாபு கேட்டுக்கொண்டார். மேற்காசிய நாடுகளில் உள்ள சில நாடுகள் தீவிரவாத சிந்தனைகளால் முன்னேற முடியாமலும் ஏழ்மையில் இருப்பதற்கும் முக்கிய காரணம் என முகமட் சாபு தெரிவித்தார்.
சமய மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளல் மேற்காசிய நாடுகள் முனைப் காட்டி வந்தபோதிலும் தீவிரவாத சிந்தனைகளால் அந்த நாடுகள் வளர்ச்சியிலிருந்து பின்தங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார் .
நாகரீகமடைந்த மக்கள் மேம்பாட்டை பாதிக்கக்கூடிய தீவிரவாத சிந்தனையை புறக்கணிக்க வேண்டும் என நேற்று பாக்காத்தான் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒருங்கிணைந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது முகமட் சாபு வலியுறுத்தினார்.