
கோலாலம்பூர், மார்ச் 17 – முஸ்லிம் அல்லாதார் வழிபாட்டு தலங்களுக்கு அருகே பள்ளிவாசல்களை அரசாங்கம் கட்டக்கூடாது என Kuala Langat நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த Ahmad Yunus Hairi கேட்டுக்கொண்டது இஸ்லாமிய உணர்வை வெளிப்படுத்துவதாக இல்லையென சரவா அமைச்சர் Abdul Karim Rahman சாடினார். இதுபோன்ற தீவிரவாத கருத்துக்கள் நிச்சயம் உண்மையான இஸ்லாமிய உணர்வை பிரதிபலிக்கவில்லையென மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவர் அமைச்சருமான Abdul Karim தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாம் மற்றவர்கள் மீது அல்லது முஸ்லிம்கள் அல்லாத அண்டை அயலாரிடம் வெறுப்புணர்வை ஊக்குவிப்பதில்லை என்பதோடு இத்தகையோர் நாட்டின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் கூறினார். இதுபோன்ற பயனற்ற பேச்சுக்களுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதோடு . மலேசியாவின் பல இனங்கள் மற்றும் பல்வேறு சமயங்களை வெறுப்பவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்றும் Abdul Karim வலியுறுத்தினார்.