
கோலாலம்பூர், மார்ச் 7 – பாரிசில் உள்ள மலேசிய அரசாங்கத்திற்கு சொந்தமான மூன்று சொத்துக்களை பறிமுதல் செய்யும் உத்தரவை அமல்படுத்துவதற்கு சுலு சுல்தான் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை மலேசிய தூதரக அதிகாரிகள் முறியடித்தனர். மலேசிய தூதரகத்திற்கு அருகிலுள்ள அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான ற உத்தரவை கடந்த டிசம்பர் சுலு சுல்தான் வாரிசுதாரர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அந்த உத்தரவின் கீழ் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை பிரான்ஸ் Bailiffs அதிகாரிகள் மதிப்பீடு செய்வதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டதாக வழக்கறிஞர்களும் மலேசிய அரசாங்க அதிகாரிகளும் தெரிவித்தனர்.