Latestமலேசியா

மலேசியாவின் 9 மாநிலங்களில் 13 முருகன் ஆலயங்கள்; 8 நாடுகளைச் சேர்ந்த 16 ஆலயங்களின் தைப்பூச நிலவரங்களை வழங்கி வணக்கம் மலேசியா சாதனை

கோலாலம்பூர், பிப்ரவரி-13 – 2025 தைப்பூச நேரலை மற்றும் நிலவரங்களை கொண்டு வந்து, உள்ளூர் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல் கல் சாதனையைப் படைத்துள்ளது வணக்கம் மலேசியா.

ஆம், இவ்வருட தைப்பூச நேரலையில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, லண்டன், நைஜீரியா, மொரிஷியஸ் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 16 ஆலயங்களின் தைப்பூச நிலவரங்களை நேயர்களுக்காக வணக்கம் மலேசியா கொண்டு வந்தது.

அதே சமயம், மலேசியாவின், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், பஹாங், மலாக்கா, ஜோகூர் மற்றும் சபா என 9 மாநிலங்களில் வீற்றிருக்கும் மொத்தம் 13 முருகன் ஆலயங்களின் தைப்பூச நிலவரங்களும் உடனுக்குடன் தரப்பட்டன.

இதற்காக உள்ளூரிலும் வெளியூரிலும் முக்கிய முருகன் திருத்தலங்களை முன்கூட்டியே தொடர்புக் கொண்டு, நேரலை மற்றும் நிலவரங்களை வழங்குவதற்குற்கு செய்தி தொடர்பாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டனர்.

உள்ளூரிலும் ஒவ்வோர் ஆலயத்திலும் தனிக் குழுக்கள் அமர்த்தப்பட்டு, நேரலைகள் செவ்வனே மேற்கொள்ளப்பட்டன.

முறையான ஏற்பாடுகளால் நேரலையும் நிலவரங்களுக்கும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருந்தன; பொது மக்களும் அவற்றை வெகுவாகப் பாராட்டினர்.

மலேசியாவில் ஒரு செய்தி ஊடகம், நேரலையில், இவ்வளவு ஆலய நிலவரங்களை கொண்டு வந்திருப்பது இதுவே முதல் முறை.

மிகப் பெரும் சமயத் திருவிழாவான தைப்பூசத்தை நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் நேரலையாகக் கண்டு களித்து முருகனின் அருளைப் பெற இது பெரும் வாய்ப்பாக அமைந்தது.

இதன் மூலம் நாட்டில் தன்னிகரற்ற தமிழ் இணையச் செய்தி ஊடகம் என்ற பெயரை வணக்கம் மலேசியா நிலை நாட்டியுள்ளது.

வரும் ஆண்டுகளில் இதை விட சிறப்பாக நேயர்களுக்கு தைப்பூச நேரலைகளையும் நிலவரங்களையும் கொண்டு வர வணக்கம் மலேசியாவுக்கு இது உத்வேகத்தை அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!