கோலாலம்பூர், ஜன 8 – மலேசியாவுக்கான பாகிஸ்தான் தூதர் Amma Baloch மாரியாதை நிமித்தமாக இந்தியா மற்றும் தெற்காசியான நாடுகளின் கட்டமைப்புக்கான மலேசியாவின் சிறப்பு தூதர் டான்ஸ்ரீ S. A விக்னேஸ்வரனை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது தூதரகத்தின் முதலாவது செயலாளர் திரு . Muhammad Adil, கவுன்சிலர் Yasir Kayani ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் தூதரும் மலேசியாவின் சிறப்பு தூதர் விக்னேஸ்வரனும் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இரு நாடுகளுக்கிடையிலான 65 ஆண்டு கால பரஸ்பர இருவழி நட்புறவை கருத்திற்கொண்டு பாகிஸ்தானுடன் பொருளாதார தொடர்புகளையும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாக டான்ஸ்ரீ வின்னேஸ்வரன் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago