கோலாலம்பூர், ஜன 5 – மலேசியாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகள் ஏழைகள் என கூறப்படுவதை புக்கிட் அமானின் உற்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு இயக்குனர் Hazani Ghazali மறுத்துள்ளார். தங்களை மலேசியாவிற்குள் கடத்திச் செல்வதற்கு ஆள்கடத்தல் கும்பலுக்கு 1,300 ரிங்கிட்வரை வழங்குவதற்கு சட்டவிரோத குடியேறிகள் தயாராய் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தால் பிரம்படி தண்டனை விதிக்கப்பட வேண்டும் என Hazani Ghazali கூறியிருந்ததற்கு முன்னாள் அமைச்சர் P. Waytha Moorthy சாடியிருந்தார். ஆவணமற்ற குடியேறிகள் நேர்மையாக வாழ்வதற்கு முயற்சிக்கும் ஏழை தொழிலாளர்கள் என்பதையும் Waytha Moorthy தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்துரைத்த Hazani Ghazali குடிநுழைவு சட்டத்தின் கீழ் சட்டவிரோத குடியேறிகளுக்கு பிரம்படி கொடுக்கும் விதி இருக்கிறது. ஒரு வழக்கறிஞரான Waytha Moorthy க்கு இது தெரியாதா என வினவினார்.
Related Articles
Check Also
Close