Latestமலேசியா

மலேசியாவிற்குள் நுழைய சீன நாட்டு விளையாட்டாளர்களுக்கு தடை இல்லை

கோலாலம்பூர், ஜன 8 – இம்மாதம் ஜன 10-ஆம் தேதியிலிருந்து 15-ஆம் தேதி வரை நடைபெறும் மலேசிய பொது பூப்பந்து போட்டியில் பங்குபெறுவதற்காக, நாட்டிற்குள் நுழைவதற்கு சீன நாட்டு விளையாட்டாளர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படாது.

எனினும், அந்த சீன நாட்டு விளையாட்டாளர்கள், மலேசிய அராங்கம் நிரணயித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென, மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைமைச் செயலாளர் Datuk Kenny Goh தெரிவித்தார்.

மேலும், சீன நாட்டு விளையாட்டாளர்கள் மலேசியா வந்தடைவதற்கு முன்பாக, வேறு நாடுகளில் அவர்கள் தங்கியிருக்கலாம் என்பதால், அவர்களின் நுழைவில் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!