
யங்கோன், ஜன 10 – மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 11 சிறார்கள் உட்பட 112 ரோஹிங்ய மக்களுக்கு மியன்மார் அரசாங்கம் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது. அவர்கள் சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவுமின்றி நாட்டிலிருந்து தப்ப முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். மியன்மாரின் தென் பகுதியில் Ayeyarwady வட்டாரத்தில் அவர்கள் அனைவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு ஜனவரி 6 ஆம்தேதி தண்டனை விதிக்கப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட சிறார்கள் தொழிற் பயிற்சி பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.