
கோலாலம்பூர், நவம்பர் 10 – 360 பாகையில் படங்களை பார்ப்பதற்கான அம்சத்தை ஆப்பிள் மெப்ஸ் (Apple Maps) கொண்டுள்ளது.
அதனால், Google Street View போன்ற அனுபவத்தை அது வழங்குகிறது.
எனினும், சில நாடுகளில் மட்டுமே அச்சேவை அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளை ; மலேசியாவில் அந்த அம்சத்திற்கான பதிவுகள் இன்று தொடங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
முதலில் சிலாங்கூரில் தொடங்கும் அந்த பதிவு, பின்னர் கட்டங்கட்டமாக இதர மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
அதன் வாயிலாக திரட்டப்படும் தரவுகள் அனைத்தும், மலேசிய வரைப்படத்தின் ஆதரவுடன் Look Around அம்சத்தில் இணைக்கப்பட்டு, உள்ளூர் பயனர்களுக்கு, மேம்படுத்தப்பட்ட Apple Maps-ஆக அறிமுகப்படுத்தப்படும்.