கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசிய மக்கள் மனங்கவர்ந்த ஓர் உள்ளூர் தமிழ் தொடர் என்றால், அது பசங்க தொடர் எனலாம்.
Prem Anand, Vice President of Indian Customer Business, Astro; Shalini Balasundaram, director; Ts.Dr Vimala Perumal, producer; Denes Kumar, producer and Mahesvaran Balakrishnan, Astro.
மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட இத்தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 100 அத்தியாயங்களைக் கொண்டு புதிதாக மலர்ந்துள்ளது அதன் சீசன் 2.
Official Poster of ‘PASANGA’ season 2.
மலேசியச் சாயலில், உள்ளூர் நடிகர்களின் சிறப்பான நடிப்பில், ஒரு குடும்ப நாடகக் கதைக்களமாக சீசன் 2 உருவாக்கியுள்ளதை, ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆன்ந்த் தெரிவித்தார்.
Prem Anand, Vice President of Indian Customer Business, Astro.
இரண்டாவது சீசன் வாயிலாக மலேசிய ஒளிபரப்பு நிலப்பரப்பின் எல்லையைக் கடந்து 100 அத்தியாயங்களைக் கொண்ட மலேசியாவின் முதல் உள்ளூர் தமிழ் தொடரை உருவாக்குவது மட்டுமல்லாது மக்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு தொடராகவும் அமைய வேண்டும் என்பதும் தங்களின் இலக்காகும் என்றார் அவர்.
Cast and crew of ‘PASANGA’ season 2.
கடுமையான யதார்த்தத்திற்குத் தள்ளப்படும் ராஜா, ஜகா மற்றும் ஆனந்த் ஆகிய மூவரின் வாழ்க்கையை நகைச்சுவையாக நாடகத் தொடராகச், சித்தரிக்கும் கதைதான் பசங்க சீசன் 2.
Cast and crew of ‘PASANGA’ season 2.
அவ்வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி தொடங்கி, ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை, ஆஸ்ட்ரோ விண்மீனில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்புக் காணவுள்ள பசங்க 2 சீசனை, நீங்களும் கண்டு களிக்கலாம்.
Shalini Balasundaram, director; Ts.Dr Vimala Perumal, producer; Denes Kumar, producer and lead cast; Moon Nila, cast and Nithya Shree, cast.