Latestமலேசியா

மலேசியாவில் இஸ்லாமிய விடுமுறை நாட்களில் வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படாது

கோலாலம்பூர், மார்ச் 15 – இஸ்லாமிய பொது விடுமுறை தினத்தன்றும், அதற்கு முதல் நாள் இரவும் நாட்டில் பேரளவில் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது.

2024 -ஆம் ஆண்டு முதல் நடப்புக்கு வரும் இந்த புதிய விதிமுறை குறித்த வழிகாட்டியை, Puspal எனப்படும் வெளிநாட்டு கலைஞர்களுக்கான படப்பிடிப்பு மற்றும் படைப்புக்கான விண்ணப்ப செயற்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டியில் எந்தெந்த இஸ்லாமிய விடுமுறை காலத்தின் போது இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்ற விபரங்களும் இடம்பெற்றுள்ளன.
ரமலான் மாதம் முழுவதும், அவால் முஹராம் (Awal Muharram ), மெளலிதுர் ரசுல் ( Maulidur Rasul ), Israk Mikraj, Nisfu Sya’ban, Nuzul Al- Quaran, ஹஜ் பெருநாள், ஈகைத் திருநாள் ஆகிய இஸ்லாமிய விடுமுறை நாட்களிலும் , முதல் நாள் இரவிலும், இசை நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு, கலைநிகழ்ச்சியின்போது வெளிநாட்டு ஆண் கலைஞர்கள், பெண்கள் போல் உடையணியவும் தடை விதிக்கப்படுகிறது.

இதனிடையே, அனைத்து தரப்புகளையும் கலந்தாலோசித்தப் பின்னரே இந்த இந்த புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டிருப்பதாக, தொடர்பு – இலக்கவியல் அமைச்சர் ஃபாமி பட்சில் ( Fahmi Fadzil ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!