
கோலாலம்பூர், பிப் 25-மலேசியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றால் அமைச்சர் என்ற முறையில் முழு ஆதரவு வழங்குவேன் என்று மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மலேசியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலாயா பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த சிவகுமார், தமிழ் வாழும் மலேசிய திருநாட்டில் மீண்டும் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றால் அது மிகவும் பாராட்டுக்குரியது.
முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்திய பெருமை மலேசியாவுக்கு உண்டு என்றார் அவர்.
மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக ஒளவையார் மாநாட்டை தொடக்கி வைக்க வந்த போது நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.