Latestமலேசியா

மலேசியாவில் ஐபோன் 16 சீரிஸைப் வாங்க, அதிகாலை 3 மணி தொடங்கி TRX முன் அலைமோதிய மக்கள் கூட்டம்

மலேசியாவில் ஐபோன் 16 சீரிஸைப் வாங்க, அதிகாலை 3 மணி தொடங்கி TRX முன் அலைமோதிய மக்கள் கூட்டம்

கோலாலம்பூர், செப்டம்பர் 20 – உலக அளவில் iPhone உபயோகிப்பதற்கும், வாங்குவதற்கும் தனி கூட்டமே உண்டு.

ஒவ்வொரு வருடமும் அப்டேட் ஆகி, வெளிவரும் புதிய iPhone மாடலை உட்சாகத்துடன் மக்கள் வாங்கி வரவேற்கின்றனர்.

அவ்வகையில், அண்மையில் வெளியான iPhone 16 ரிலீசைத் தொடர்ந்து, மலேசியாவிலும் இன்று தொடங்கி அது விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், TRX கட்டிடத்தின் முன் அதனை வாங்குவதற்காக கூட்டம் அதிகாலை 3 மணி முதல் அலைமோதியுள்ளது.

8 மணிக்குதான் TRX Apple Store திறக்கும் என்றாலும், இன்று அதிகாலை 3 மணி தொடங்கியே, மலேசியர்களும், வெளிநாட்டினர்களும் அதன் முன் வரிசையில் நிற்கும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

முன் பதிவு செய்து ஐபோன் 16-யைப் பெற்றுக் கொள்பவர்களும், வாங்குபவர்கள் என இரு தரப்பினரும் முந்தி அடித்துக் கொண்டு அங்கு காத்திருப்பது காணொளியில் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!