Latestமலேசியா

மலேசியாவில் குரங்கம்மை இல்லை; ஆனால் விழிப்புடன் இருங்கள் – கைரி

கோலாலம்பூர், ஜூன் 8 – மலேசியா குரங்கம்மை நோயிலிருந்து விடுபட்டிருந்தாலும், மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலூடின் அறிவுறுத்தியிருக்கின்றார்.

குறிப்பாக, குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியிருக்கும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் கவனமுடன் இருப்பது அவசியமென அவர் குறிப்பிட்டார்.

குரங்கம்மை தொற்றக் கூடிய நடவடிக்கைகளை மலேசியர்கள் தவிர்க்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் கூறினார்.
பொதுவாக மேற்கு – மத்திய ஆப்பிரிக்க பகுதிகளில் காணப்படும் குரங்கம்மை தற்போது ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், மொரோக்கோ ( Morocco ) ஆகிய நாடுகளில் பரவியிருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!