கோலாலம்பூர், பிப் 11 – நாட்டின் பேரிடர் காலத்தின் போது, நிபந்தனையுடன் கோவாக்சின் ( Covaxin) தடுப்பு மருந்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ( Dr. Noor Hisham Abdullah) தெரிவித்தார்.
இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் , நாட்டில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படுமென அவர் கூறினார்.