கோலாலம்பூர், அக்டோபர் 1 – புள்ளியியல் துறையின் படி, மலேசியாவில் தொற்று நோயால் சீர்குலைந்த ஆயுட்காலம் எண்ணிக்கை தற்போது மீளத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் ‘Hayat Ringkas Malaysia 2022லிருந்து 2024’-யின் அறிக்கையின்படி, தொற்றுநோய்களின் போது நாட்டின் ஆயுட்காலம் வீழ்ச்சியடைந்தாலும், சிலாங்கூர், லாபுவான் மற்றும் கோலாலம்பூர் போன்ற பகுதிகள் 2024ஆம் ஆண்டில் அதன் வாழ் மக்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில், பிறப்பு ஆயுட்காலம் 1.2 ஆண்டுகள் அதிகரிக்கும் என்றும், பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 75.2 வயது வாழ்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை விட 4.8 ஆண்டுகள் அதிகமாக வாழ்கின்றனர்.
இந்நிலையில், பெட்டாலிங் மாவட்டம் அதிக ஆயுட்காலமாக 80.2 வயது முன்னணியில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
லாபுவான் மற்றும் கோலாலம்பூர் ஆகியவையும் தேசிய சராசரி ஆயுட்காலத்தை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.