Latestமலேசியா

மலேசியாவில் தினசரி 18 பேர் திவலாகின்றனர்

கோலாலம்பூர், ஜூன் 23 – நாட்டில் கடந்த 5 மாதங்களாக தினசரி 18 பேர் திவாலாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாண்டு ஜனவரி தொடங்கி முதல் 5 மாதங்களில் 2,694 பேர் திவாலாகியுள்ளதாக திவால் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு மே மாதம் வரை திவால் அடைந்தவர்களில் 60 விழுக்காட்டினர் 25 மற்றும் 44 வயதுக்குட்பட்டவர்களாவர். இதுமட்டுமின்றி 2018ஆம் ஆண்டு முதல் திவாலானவர்களில் 200க்கும் மேற்பட்டோர் 25 வயதுடையோர் அல்லது அதற்கும் குறைந்த வயதுடையவர்கள் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.

2018ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு மே மாதம்வரை 46,132 பேர் திவால் அடைந்துள்ளனர். இவர்களில் பாதிப்பேர் தனிப்பட்ட கடன்களுக்காக திவால் ஆனவர்கள். மேலும் தவணைமுறை கடன் திட்டத்தில் வாகனங்கள் வாங்கியது, வர்த்தகக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு எனப்படும் பண அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கிவிட்டு அதற்கான பணத்தை சரியான முறையில் திரும்ப செலுத்தத் தவறியதால் பலர் திவாலுக்கு உள்ளானதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!