கோலாலம்பூர், ஏப் 8 – மலேசியாவில் தெலுங்கு வம்சாவளியினர் கல்வி, பொருளாதாரம் மற்றும் வர்ரத்தகத்தில் உயரவும், சாதனை படைக்கவும் தெலுங்கு புத்தாண்டு வகை செய்யட்டும் என ம.இ.கா தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது ஸ்ரீ க்ரோடி நாம உகாதி தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
ம.இ.காவில் உயர் பதவி மற்றும் சாதாரண பதவிகளில் இருக்கும் தெலுங்கு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை செய்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
அந்த வகையில் ம.இ.காவின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்புகளை செய்த சாதாரண தொண்டர் தொடங்கி உயர் பதவிகள் வகித்து வரும் அனைவருக்கும் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“இந்த தெலுங்கு புத்தாண்டில் அனைவரும் மற்ற இன மக்களோடு குறிப்பாக தமிழர்கள், மலையாளிகள் மற்றும் சீக்கியர்களுடன் இணைந்து ஒற்றுமையாய் தெலுங்கு புத்தாண்டை கொண்டாட வேண்டுகிறேன்” என அவர் கூறியுள்ளார்.