Latestஉலகம்

மலேசியாவில் பருவ மழை; சிங்கப்பூரில் காய்கறிகளின் விலை உயர்வு

சிங்கப்பூர், நவ 26 – மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் ஆண்டு இறுதி பருவ மழையின் காரணமாக, சிங்கப்பூரில் விற்கப்படும் காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கின்றது.

வெள்ளரி மற்றும் பாகற்காயின் விலை , 5 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு 1 டாலர் 80 சென்னிலிருந்து 2 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பசலைக் கீரை தற்போது 3 டாலர் 50 சென்னிலிருந்து 4 டாலர் வரை விற்கப்படுவதாக , உள்ளூர் காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூருக்கான 42 விழுக்காடு காய்கறிகளை மலேசியா ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!