
கோலாலம்பூர், செப்டம்பர் 23 – தேசியப் பதிவுத் துறையின் (NRD) தரவுகளின் படி மலேசியாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. மலேசியாவில் 1995-ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 581,234 பேராக உச்சத்தை எட்டியதாக தேசியப் பதிவுத்துறையின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியாவில் பிறப்பு விகிதம் 2020-ஆம் ஆண்டில் பாதியாக குறைந்துள்ளது. 2014-இல் பிறப்பு விகிதத்தின் அண்மைய உச்சநிலை 547,763 பேராக இருந்தததைத் தேசிய பதிவுத்துறை சுட்டிக்காட்டியது. அதன் பின்னர் பிறப்பு விகிதம் 2020-இல் அரை மில்லியனுக்கும் குறைவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 437,710 குழந்தைகள் பிறந்தன. செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்த ஆண்டு இதுவரை 267,246 குழந்தைகள் பிறந்துள்ளன. கடைசியாக 440,000க்கும் குறைவான பிறப்புகளின் எண்ணிக்கை 1980-இல் 431,637 ஆக இருந்தது. பின்னர், 1980-களில் பிறப்பு விகிதம் சீராக உயர்ந்து 1990-களில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்தன.