
கோலாலம்பூர், ஜூன் 1 – மலேசியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம் அல்லாதார் எல்லை மீறி நடந்துகொண்டால் அவர்களது நலன்களுக்கு மிரட்டல் ஏற்படும் என பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் எச்சரித்துள்ளார். DAP தொடங்கப்பட்டது முதல் நாட்டிற்கு ஒரு தொல்லயென வருணித்த அவர் அக்கட்சி வரம்பு மீறி சென்றுவிட்டதாக தமது முகநூலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் ஹடி அவாங் தெரிவித்துள்ளார். மலேசியன் மலேசியா கோட்பாட்டின் மூலம் மதச்சார்பின்மையை ஏற்படுத்துவதற்கு DAP முயற்சிப்பதாக அவர் கூறினார். . 1969 ஆம் ஆண்டு மே 13 சம்பவங்கள் DAP க்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். DAP யின் மோசமான செல்வாக்கு நாட்டின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் சீர்குலைத்துவிடும் என்றும் ஹடி கூறினார். DAP யின் சிந்தாந்தத்திற்கு துணைபோகும் மலாய்க்காரர்களையும் ஹாடி அவாங் சாடினார்,