
கோலாலம்பூர், ஜன 18 – மின்னலே, கஜினி, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட ஏராளமான வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்தவரான ஹாரிஸ் ஜெயராஜ், வரும் சனிக்கிழமை , மலேசியாவில் தனது முதல் இசைநிகழ்ச்சியை அறங்கேறச் செய்யவிருக்கிறார்.
அதற்காக, அண்ட்ரியா, கார்த்திக் , விஜய் பிரகாஷ், ஹரிச்சரன் , திவாகர், ஹரிபியா என 14 பாடகர்கள் அடங்கிய மிகப் பெரிய இசை நட்சித்தர பட்டாளத்தை தன்னுடன் அழைத்து வரவிருக்கின்றார் ஹாரிஸ் ஜெயராஜ்.
மொத்தம் 39 பாடல்களின் இனிய கானங்களுடன் , மலேசிய ரசிகர்களை மெய்மறக்க வைக்க தாமும் தமது இசைக்குழுவினரும் முழு தயார் நிலையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
இன்று மதியம், தலைநகர் Park Royal Collection தங்கும் விடுதியில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் , ஹாரிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்த கான மழைபொழியவிருக்கும் இசைநிகழ்ச்சியில், நான்கு உள்நாட்டு கலைஞர்களும் தங்களது இசை படைப்பை படைக்கவிருக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.